/* */

குமரி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 6 டன் ரேசன் அரிசி பறிமுதல்

குமரி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 6 டன் ரேசன் அரிசியையும் கடத்திச்சென்ற வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

குமரி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 6 டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

கன்னியாகுமரி அருகே ரேஷன் அரிசி கடத்தியதால் பறிமுதல்செய்யப்பட்ட வாகனம்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நாகர்கோவில் கட்டுப்பாட்டு அறை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன், ஆரல்வாய் மொழி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் ஜான் ஆகியோர் குமாரபுரம் 4 வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஒன்றை போலீசார் தடுத்தனர், போலீஸார் நிற்பதை பார்த்த டிரைவர் ஓடும் டெம்போவில் இருந்து குதித்து தப்பியோடி விட்டார்.

இதேபோல் பின்னால் வந்த மற்றொரு டெம்போ டிரைவரும் நடுரோட்டில் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதனை தொடர்ந்து போலீஸார் அந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது டெம்போக்கள் முழுவதும் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. ஒவ்வொரு டெம்போக்களிலும் தலா 3 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரேசன் அரிசியையும் டெம்போவையும் பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆரல்வாய் மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாகன ஓட்டுனர்களையும், ரேஷன் அரிசி கடத்தல் காரர்களையும் தேடி வருகின்றனர்.

Updated On: 22 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!