/* */

குமரியில் புறா வளர்ப்பை ஊக்குவிக்க போட்டி: கேடயம், பரிசுத் தொகை வழங்கல்

குமரியில் புறா வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் போட்டி நடத்தி வெற்றி கேடயங்களும், பரிசு தொகையும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

குமரியில் புறா வளர்ப்பை ஊக்குவிக்க போட்டி: கேடயம், பரிசுத் தொகை வழங்கல்
X

புறாக்கள் (பைல் படம்)

பண்டைய காலத்தில் தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் போன்ற எந்த தகவல் தொடர்பு உபகரணங்களும் இல்லாத மன்னர் காலம் தொட்டு, தகவல் தொடர்புக்காக மட்டும் அல்லாமல் மனித வாழ்க்கையுடன் ஒன்றிய ஒரு பறவையாக புறாக்கள் இருந்து வந்தன.

புத்தி கூர்மையுடன் உயரமாகவும் வேகமாகவும் பறக்கும் புறாக்கள் இல்லாத வீடு இல்லை என்ற நிலை மாறி தற்போது புறாக்களை காண்பது அரிது என்ற நிலை வந்துள்ளது.

பல்வேறு இடங்களில் புறாக்களை வரை படங்களிலும், தொலைகாட்சி மற்றும் சினிமாக்களில் பார்க்கும் நிலையே இருந்து வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சவுத் இந்தியன் டிப்ளர் சொசைட்டி அமைப்பானது புறா வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வருடம் தோறும் புறா வளர்க்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து வரும் இந்த அமைப்பானது புறா விடுதல் போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறும் கலைஞர்களுக்கு பரிசுகளும் அளித்து புறா வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறது.

இதனிடையே இந்த அமைப்பு சார்பில் 4வது ஆண்டாக நாகர்கோவிலில் புறா விடுதல் போட்டி நடத்தப்பட்டது. அதன்படி 30 மணி நேரம், 20 மணி நேரம், 15 மணி நேரம், 10 மணி நேரம் என 4 பிரிவுகளில் புறா பறக்கவிடும் போட்டி நடத்தியது.

மேலும் அதில் வெற்றி பெரும் புறாக்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு வெற்றி கேடயங்களும், பரிசு தொகையும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான பச்சைமால், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு வெற்றி கேடயங்களையும், பரிசு தொகையையும், பரிசு பொருட்களையும் வழங்கி பாராட்டினார்.

Updated On: 29 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...