/* */

மகாசிவராத்தியையொட்டி கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம்

மகாசிவராத்தியையொட்டி சிவபக்தர்கள் சிவாலய ஓட்டம் மூலம் 12 ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

HIGHLIGHTS

மகாசிவராத்தியையொட்டி கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம்
X

கன்னியாக்குமரி மாவட்டம் முஞ்சிறை திருமலை சிவன் கோயிலில் சிவாலய ஓட்டம் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நேற்று முஞ்சிறை பகுதியில் அமைந்துள்ள திருமலை சிவன் கோயிலில் தொடங்கியது. தொடர்ந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். கடைசி திருத்தலமான திருநட்டாலத்தில் சிவபெருமானை வழிபடும் பக்தர்கள் அருகில் அமைந்துள்ள சங்கரநாராயணர் விஷ்ணு கோயிலில் வழிபட்டு சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்கள் நேற்று மாலை முதல் சிவாலய ஓட்டத்தைத் தொடங்கிவிட்டனர். 12 சிவாலயங்களுக்கும் செல்ல சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். சிவராத்திரி தினமான இன்று பகல்பொழுது, இன்று இரவு என இந்த 12 சிவாலயங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் கலந்துகொள்கிறார்கள்.

Updated On: 1 March 2022 6:07 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்