/* */

காவல் துறைக்கு சவால் விடும் புகையிலை குட்கா விற்பனை

குமரியில் காவல் துறைக்கு சவால் விடும் புகையிலை குட்கா விற்பனை நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

HIGHLIGHTS

காவல் துறைக்கு சவால் விடும் புகையிலை குட்கா விற்பனை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கை மூலம் தடைசெய்யப்பட்ட 868 பாக்கெட் புகையிலை, குட்கா மற்றும் ஐந்து லட்சத்து நாற்பத்தி நான்காயிரத்து அறுநூறு முப்பத்தி ஐந்து ரூபாய் ( 5,44,635/- ) பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்கவும், தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார், அதன் படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா, புகையிலை பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோட்டார் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் செல்வ நாராயணன் மற்றும் போலீசார் அங்கு சென்று அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மேக்னராம்(38) என்பது தெரியவந்தது, தொடர்ந்து சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு, விற்பனை செய்ததை கண்டுபிடித்தார்.

இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 868 பாக்கெட் குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் ஐந்து லட்சத்து நாற்பத்தி நான்காயிரத்து அறுநூறு முப்பத்தி ஐந்து ரூபாய் ( 5,44,635 /- ) பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

குமரியில் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தாலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்த 23 பேர் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2842 பாக்கெட் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Sep 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்