/* */

ரூ.11,96,136 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கல்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வராந்தோறும் திங்கள்கிழமை 10மணி முதல் பிற்பகல் 1 மணி பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ரூ.11,96,136 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:   ஆட்சியர் வழங்கல்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர் மா.ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 360 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,27,332/- மதிப்பிலான தொழில் தொடங்க வங்கி மானிய கடன் உதவிகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பயனாளிகளுக்கு ரூ.1,27,332/- மதிப்பிலான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் வணிக துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு ரூ.10,68,804 /- மதிப்பிலான மரச்செக்கு மற்றும் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ்நாடு நாள் விழா மற்றும் முத்தமிழ் கலைஞர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கு.பிரகாஷ் வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், வேளாண் துணை இயக்குநர் முகமது இரபீக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு