/* */

தேவரியம்பக்கம் வாக்குச்சாவடி வளாகத்தில் தேங்கி நின்ற மழை நீர்

தேவரியம்பக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி வாக்குச்சாவடி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேக்கமடைந்துள்ளதால், வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பு

HIGHLIGHTS

தேவரியம்பக்கம் வாக்குச்சாவடி வளாகத்தில் தேங்கி நின்ற மழை நீர்
X

மழைநீரில் நடந்து சென்று ஜனநாயக கடமையாற்ற செல்லும் வாக்காளர்கள்

வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால், வாக்கு விழுக்காடு குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர் ஒன்றியத்தில் காலை ஏழு மணியிலிருந்தே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேவரியம்பக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், மழைநீர் 3 அடிக்கு மேல் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

இந்தப்பள்ளி வளாகத்தில் 5 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கிராம ஊராட்சிச் செயலர் விரைவாக செயல்பட்டு, நீரை வெளியேற்ற மோட்டார் அமைத்து நீரை தற்போது வெளியேற்றி வருகின்றனர்.

தொடர்மழை காரணமாகப் பள்ளிகளில் ஊழியர்கள் பணிபுரிவதற்கு சற்று சிரமப்பட்டு வருகின்றனர். குளிர்காற்று, தொடர்மழை தொடர்ந்தால் வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

Updated On: 6 Oct 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  9. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?