/* */

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

காஞ்சிபுரம் வைகாசித் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி,பூதேவி தாயாருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
X

 ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ நாள் வைபவத்தில் திருத்தேர் உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய ஸ்ரீ தேவராஜ சுவாமி.

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசித் திருவிழா கடந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவினை முன்னிட்டு தினசரி பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தங்கக் கருட வாகன சேவைக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமி ஆலயத்திலிருந்து அதிகாலையில் புறப்பாடாகி காந்தி சாலையில் உள்ள தேரடிக்கு எழுந்தருளினார்.

தேரில் இருக்கும் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். அப்போது கூட்டம் அதிகமானாதால் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

தேர் சரியாக அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டது.காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்தியப்பிரியா,எஸ்.பி.சுதாகர்,சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு,கோயில் நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன்,செயல் அலுவலர் வெள்ளைச்சாமி உட்பட பலரும் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. வே.கம்பன் சிவாலய அறக்கட்டளை உட்பட பல்வேறு சங்கங்கள்,,வணிக நிறுவனங்கள் ஆகியனவும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Updated On: 19 May 2022 4:20 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...