/* */

காஞ்சிபுரத்தில் தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலர் பொன்னையா ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மெகா கெரோனா தடுப்பூசி முகாமை கண்காணிப்பு அலுவலர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில்  தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலர் பொன்னையா ஆய்வு
X

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமினை ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர் பா. பொன்னையா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் பேரூராட்சிகள் பெருநகராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் 609 மையங்களில் இன்று காலை 7 மணி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்து பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலர் பா.பொன்னையா இன்று ஸ்ரீபெரும்புதூர் படப்பை காஞ்சிபுரம் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த முகாம்களில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட விவரங்கள் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வந்த அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பின் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Updated On: 12 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...