/* */

பணிகள் முடிந்தும் பண்டிகையை காரணம் காட்டும் வியாபாரிகள்! மௌனம் காக்கும் மாநகராட்சி

Kanchipuram News in Tamil -நூறாண்டுகள் பழமையான ராஜாஜி காய்கறி சந்தையை நவீன வணிக வளாகமாக கட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி முடிவு செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.

HIGHLIGHTS

பணிகள் முடிந்தும் பண்டிகையை காரணம் காட்டும் வியாபாரிகள்! மௌனம் காக்கும் மாநகராட்சி
X

காஞ்சிபுரம் நகரில் இயங்கி வரும் ராஜாஜி காய்கறி சந்தை மற்றும் தற்காலிக சந்தை அமைக்கப்பட்ட இடம்.

Kanchipuram News in Tamil -கடந்த 1907 ம் ஆண்டு காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைக்கபட்டது ராஜாஜி காய்கறி சந்தை. கடந்த 115 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள தோட்டக்கலை விவசாயிகளிடமிருந்தும் நாள்தோறும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

தற்போது இயங்கி வரும் ராஜாஜி காய்கறி சந்தையில் சுமார் 200 கடைகளுக்கு மேல் செயல்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

நகரின் போக்குவரத்து நெரிசல் முக்கிய காரணமாக இந்த ராஜாஜி காய்கறி சந்தை விளங்குகிறது. மேலும் பழமையான இந்த காய்கறி சந்தையை தற்போது நவீன அடிப்படை வசதிகளை கொண்ட புதிய வணிக வளாகமாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டது.

இதற்கான பல கட்ட முயற்சிகளை நகராட்சியாக இருக்கும் போது தொடங்கி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்ட கடந்த ஜூலை மாதம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், ஆணையர் கணேசன் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தனர்.

இந்நிலையில் அங்குள்ள வியாபாரிகளுக்காக தற்காலிக காய்கறி சந்தையை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில் அமைக்கும் பணியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநகராட்சி துவக்கியது

இந்நிலையில் பழைய இடத்திலிருந்து புதிய தற்காலிக இடத்திற்கு மாற கால அவகாசம் கேட்டதின் பேரில் அதிகாரிகள் அவகாசம் அளித்தும், அங்கு செல்ல மனமில்லாமல் வியாபாரிகள் காலம் தாழ்த்துகின்றனர்.

கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி, இந்த மாதம் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை போன்ற விழாக்காலத்தில் வியாபாரம் பாதிக்கும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மாநகராட்சி சற்று மனமிரங்கியது. தற்போது இதற்கான தேதி அறிவிக்க உள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் தீபாவளி பண்டிகையும் அதைத்தொடர்ந்து உள்ள கிறிஸ்மஸ் , பொங்கல் என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் மௌனம் காத்து வருகின்றனர் .

மேலும் புதியதாக அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையில் கடைகள் பிரிக்கப்பட்டு அதற்கு தேவையான மின்சாதன வசதிகள் செய்யப்பட்டும், தரை பகுதிகள் சீர் செய்யப்படாததால் அதையும் ஒரு காரணமாக கூறுகின்றனர்.

மேலும் இன்னும் சில இடங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் புதிய பணிகள் துவங்கு நடைபெறுவதிலும் சிக்கல் உள்ளதை காரணமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பூமி பூஜை நடைபெற்று 3 மாதங்கள் முடிவுற்றும் எந்த ஒரு துவக்க பணிகளும் நடைபெறவில்லை என்பதும், சாதாரண மழைக்கே இப்போது உள்ள ராஜாஜி காய்கறி சுகாதார சீர்கேடு கேள்விக்குறியாகும் நிலையில் உடனடியாக இடம் மாற்றம் நடைபெற்றால் போக்குவரத்து நெரிசல் குறைவதும் மட்டும் இல்லாமல், கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் இன்றி அப்பகுதி விளங்கும் என தெரிவிக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 12 Oct 2022 9:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?