/* */

காஞ்சிபுரம் அருகே கல் குவாரியை மூட நடவடிக்கை வேண்டும்.. ஊராட்சி மன்றத் தலைவர் மனு…

காஞ்சிபுரம் அருகே செயல்படும் தனியார் கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சி மன்றத் தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே கல் குவாரியை மூட நடவடிக்கை வேண்டும்.. ஊராட்சி மன்றத் தலைவர் மனு…
X

கல் குவாரியை மூடக்கோரி மலைப்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

குறைதீர் கூட்டத்தின்போது, 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. பின்னர், அந்த மனுக்களை ஆய்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உள்ளிட்ட அலுவலர்கள் துறைவாரியாக அதனை கொடுத்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.

அப்போது, குன்றத்தூர் வட்டத்தை சேர்ந்த மலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கோபத்மநாபன் பொதுமக்கள் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் அளித்த மனு விவரம் வருமாறு:

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பையை அடுத்த மலைப்பட்டு ஊராட்சியில் சுமார் 480 குடியிருப்புகளில் 3000 பேர் வசித்து வருகின்றனர். அந்த ஊராட்சி பொதுமக்களுக்கு அளிக்க போதிய தூய்மையான குடிநீர் கிடைக்காததால், அருகாமையில் உள்ள மாகாண்யம் ஊராட்சி பகுதியில் இருந்து மலைப்பட்டு ஊராட்சிக்கு எட்டு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மலைப்பட்டு ஊராட்சியில் 250 ஏக்கர் விலை நிலங்களும், மாகானியத்தில் சுமார் 300 ஏக்கர் மற்றும் வல்லாரையில் 300 ஏக்கர் என மொத்தம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்தப் பகுதியினை சுற்றிலும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மலைப்பட்டு கிராமப் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியின் அருகாமையில் தனியார் நிறுவனங்கள் மூலம் கிரஷர் மற்றும் கல் அரவை நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குண்டு பெரும்பேடு, கொளத்தூர், வல்லாரை மற்றும் மாகாணியும் வருவாய் கால்வாய் இருந்து அடையாறு ஆற்றுப்பகுதிக்கு கலங்கல் நீர் வந்து கொண்டு இருந்தது. அந்தக் கால்வாயை தனியார் குவாரி உரிமையாளர்கள் முற்றிலும் அடைத்துவிட்டனர்.

அதுமட்டும் இல்லாமல் இந்த தனியார் குவாரி சுமார் 600 அடி ஆழத்தில் பள்ளம் எடுத்து வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் சுற்றிலும் உள்ள குடியிருப்பு வீடுகளிலும் அதிர்வு ஏற்படுகிறது. கல் அரவையின் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு மாசு செல்வதால் பொதுமக்கள் பல நோய்களினால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் மலைப்பட்டு பிரதான சாலையில் இருந்து பொதுப்பணித்துறை ஏரிக்கு சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் ஏரியின் உள்ளேயே கல்குவாரி உரிமையாளர்கள் சாலை வசதிகள் ஏற்படுத்தியதால், நீர் சேமிப்பு இந்தப் பகுதியில் முற்றிலும் குறைந்து விட்டது.

மலைப்பட்டு கிராமத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் தனியார் கிரஷர் மற்றும் கல்குவாரியை உடனே மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 19 Dec 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!