/* */

மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் வாள்சண்டை போட்டி : ஆட்சியர் துவக்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் 14 வது மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் வாள்சண்டை ( பென்சீன்ங் ) விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் வாள்சண்டை  போட்டி :  ஆட்சியர் துவக்கி வைப்பு
X

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வீல் சேர் வாள் சண்டை  போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தபோது. 


காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் 14வது மாநில அளவிலான வீல் சேர் வாள் சண்டை (பென்சிங்) விளையாட்டுப் போட்டிகள் இன்று காலை தமிழ்நாடு மாநில வீல் சேர் பின் சிங் பெடரேஷன் செயலாளர் ஜோசப் சுரேஷ் மற்றும் தலைவர் நுர்ஹதீன் தலைமையில் துவங்கியது.

இப்போ போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இப் போட்டியில் பங்கேற்க 25 மாவட்டங்களை சேர்ந்த 150 பென்சிங் விளையாட்டு வீரர்கள் 20 வயது முதல் 40 வரை இரண்டு வகை பிரிவுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

போட்டிகள் எபிக் , ஃபாயில், சேபர் எனும் பிரிவுகளுக்கு இன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் தேர்வு பெறும் விளையாட்டு வீரர்கள் வரும் இருபதாம் தேதி அரியானாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.

இப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட வீல் சேர் பென்சிங் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். போட்டிகளினை‌ கண்காணிக்க நடுவர்கள் மற்றும் விளையாட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாலை பரிசளிப்பு விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.

முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்ட மாற்று திறனாளி வீல் சேர் பென்சிங் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியை சிறப்பாக நடத்திய மாவட்ட நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு அசோசியேசன் குழு பாராட்டுகளை தெரிவித்து மேலும் பல்வேறு போட்டிகளை நடத்தி சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாற்று திறனாளி விளையாட்டு வீரர்களை கௌரவித்து அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டனர்

Updated On: 4 March 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!