/* */

மகளிர் பெண் காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: டிஐஜி துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட பெண் காவலர்களுக்கு தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மகளிர் பெண் காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: டிஐஜி துவக்கி வைப்பு
X

பெண் காவலர்களுக்கான உடல் பரிசோதனை முகாமினை பார்வையிட்ட டிஐஜி எம். சத்யபிரியா மற்றும் காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர்.

சர்வதேச மகளிர் தினம் கடந்த 8ஆம் தேதி உலகெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகமெங்கும் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு கடந்த ஒரு வருட காலமாக ஓய்வின்றி பணி நெருக்கடி ஏற்பட்டு சிறப்பாக பணிபுரிந்து வந்தனர்.

இவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் காவலர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட பெண் காவலர்களான முழு உடல் பரிசோதனை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சி சரக டிஐஜி எம்.சத்யபிரியா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் துவக்கி வைத்தனர். இதில் 120 பெண் காவலர்கள் , அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 50 என பங்கேற்று தங்கள் உடலைப் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.

காவலர்களிடையே டிஐஜி சத்யபிரியா பேசுகையில், காவலர்கள் தங்கள் உடல் நிலையை சரியான முறையில் பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான தீர்வுகளை முறையாக கையாள வேண்டும் எனவும் உடல்நலனில் அக்கறை கொண்டால் அனைத்து செயல்களும் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார். இம்மருத்துவ முகாமில் பெண் காவலர்களின் உயரம், எடையளவு, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் , கண் பரிசோதனை, இசிசி, எக்கோ மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை செங்கல்பட்டு மாவட்ட பெண் காவலர்களுக்கு இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Updated On: 14 March 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!