/* */

காஞ்சிபுரத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்க நாணயம்

காஞ்சிபுரம் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்களில் 3 பேருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்க நாணயம்
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுபட்ட 4 லட்சம் பேர் நாளை இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனை ஆய்வு செய்த பெருநகராட்சி ஆணையர், வார்டுகள் தோறும் முகாம்கள் நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகளில் மக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும்.

மேலும் நாளை காஞ்சிபுரம் பெரு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் நபர்களிலிருந்து குலுக்கல் முறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் சிறப்பு பரிசாக அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 12 Sep 2021 3:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  8. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  9. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே