/* */

கையில் காலி தட்டேந்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

சட்டபூர்வ ஓய்வூதியம் அகவிலைப்படி உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கையில் காலி தட்டேந்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
X

சட்டபூர்வ ஓய்வூதியம் அகவிலைப்படி உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி காஞ்சிபுரம் ஒன்றிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் என். குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது .

தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த காலங்களில் குறைந்த அளவில் ஊதியங்கள் பெற்று இவர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் எவ்வித அரசு பண பலனையும் பெற்று இல்லாத சூழ்நிலையில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் முதியோர் நிலையை அடைந்து உள்ளதால் குடும்பம் மற்றும் பல்வேறு உடல் நலக் குறைவு உள்ளிட்டுவைகளுக்கு அதிக அளவில் செலவு செய்வதால் வாழ்வாதாரத்திற்கு பெரும் கேள்விக்குறியாகும் நிலை அடிக்கடி உருவாகிறது. இதனால் தங்களுக்கு அரசு அளிக்கும் ஓய்வூதியத்தை அதிகரிக்கும் வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாளாக நிலுவையில் உள்ளது

இவர்களின் சங்க மாநில மாநாடு கடந்த மாதம் தூத்துக்குடியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒன்றிய அளவில் காலி தட்டேந்தி அனைத்து ஒன்றிய அரசு அலுவலங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துதல் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களிலும் அரசு அலுவலகம் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் சங்கர் , மதியழகன் , ஆரோக்கியமேரி, ஜே அருள் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜே. தாமஸ் இளங்கோவன் , செயலாளர் வி தணிகைமணி , பொருளாளர் கன்னியப்பன் , மாவட்ட துணைத் தலைவர் வெ.குமார் ஆகியோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றினர் .

காஞ்சிபுரம் ஒன்றியம் சார்பில் அதன் தலைவர் எம். குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் 100க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கையில் காலித் தட்டேந்தி தமிழக அரசுக்கு எதிராக தங்கள் கோரிக்கையை முழுக்கங்களாக எழுப்பினர்.

இதில் சட்டபூர்வ ஓய்வூதியமாக ரூபாய் 7 ஆயிரத்து 850 வழங்குதல், 3 சதவீத அகவிலைப்படி வழங்குதல், குடும்ப ஓய்வூதியம் , ஈமகிரியை செலவு நிதி , இலவச பஸ் பாஸ், இலவச மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிருத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்க தலைவர் குமார், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி, சமூக நல இயக்குனர் பரிந்துரைத்துள்ள சட்ட பூர்வ ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் எனவும், இன்றைய விலைவாசி உயர்வில் குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்வாதாரம் செய்ய இயலாத நிலையில் இது போன்ற முக்கிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இறுதியாக ஒன்றிய பொருளாளர் ராணி நன்றி தெரிவித்தார்.

Updated On: 14 Oct 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  4. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  7. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  8. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  9. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  10. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...