/* */

பொது சுகாதார கழிவறை வளாகம் மற்றும் கைபம்பு சீரமைக்க கோரிக்கை

மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 8.5 லட்சம் மதிப்பிற்கு கட்டப்பட்ட நவீன கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.

HIGHLIGHTS

பொது சுகாதார கழிவறை வளாகம் மற்றும் கைபம்பு சீரமைக்க  கோரிக்கை
X

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு பகுதியில் உள்ள நவீன சுகாதார கழிவறையை புதுப்பிக்க கோரியும், கைபம்பு சீரமைத்து தர கோரியுள்ள இடம்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி நான்கு மண்டலங்களாக பிரிக்கபட்டு பகுதி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாமன்றத்தின் தீர்மானம் மூலம் தற்போது மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையிலான மன்றம் செயல்படுத்தி வருகிறது.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் முதல் முறையாக மாநகராட்சியில் தமிழக அரசு உத்தரவும்படி 4 மண்டலங்களிலும் 250 பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் குறைகள் கேட்டறியப்பட்டது.

இந்த 250 பகுதி சபா கூட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்களிடம் கழிவறை , குடிநீர், சாலை வசதி , தெருவிளக்கு உள்ளிட்டவைகளும் , புதியதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதி மக்கள் பேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நகராட்சியாக இருந்த போது 51 வார்டுகளையும் பொதுமக்கள் தேவைக்காக பொது சுகாதார கழிவறை வளாகம் பல லட்சம் மதிப்பீட்டில் அனைத்து பகுதிகளிலும் கட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை சரியாக பராமரிக்காத காரணத்தால் தற்போது சிலை எண்ணிக்கையிலே உள்ளதும், சில சுகாதார கழிவறை வளாக பணிகள் பாதியிலே நின்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இல்லந்தோறும் கழிவறை எனும் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் குறிப்பாக இத்திட்டம் மான்யத்துடன் கூடிய கழிவறை திட்டத்திற்கு நிதி அளிக்கப்படுகிறது.

அவ்வகையில் 39 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர்.

இதில் கடந்த காலத்தில் சுமார் 8.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பொது கழிப்பிடம் தற்போது அப்பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பகுதியில் கட்டைகளை போட்டு வருவதால் சுகாதார வளாகம் மெல்ல மெல்ல செயலற்று சமூக விரோத இடமாக மாறி வருகிறது.

இது மட்டும் இல்லாமல் அதன் அருகிலேயே குப்பை கழிவுகளை போட்டு சுகாதார சீர்கேட்டுகளை உருவாக்கி வருவதாகவும் , அதே பகுதியில் கடந்த காலங்களில் குடிநீர் தேவைக்காக போடப்பட்ட கைபம்பு ஆழ்துளை கிணறு செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருவது வருத்தமளிப்பதாகவும், உடனடியாக இதனை மாநகராட்சி செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கின்றனர்.

நகரின் தூய்மை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் பொதுமக்கள் அதனை திறன் பட பராமரித்து செயல்பாட்டில் வைத்துக் கள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

பாதியில் கட்டப்பட்டு நின்று போன சுகாதார வணிகவளாகத்தை மாநகராட்சி பகுதியில் கண்டறிந்து அதனை முழுமைப்படுத்தி தூய்மை காஞ்சியை வலியுறுத்தும் வகையில் அந்தந்த மாமன்ற உறுப்பினர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது

Updated On: 8 Nov 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்