/* */

சுகாதார நிலையம் அமைக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டியும் , இரண்டாவது கார்த்திகை சோமாலத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை பல்வேறு சிவாலயங்களில் நடைபெற்றது.

HIGHLIGHTS

சுகாதார நிலையம் அமைக்க கோரி  ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
X

வாலாஜாபாத் அடுத்த தேவரியம் பாக்கம் கிராம ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய அமைக்க கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் உடன் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள தேவரியம்பாக்கத்தில் அரசு விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அக்கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியை சந்தித்து மக்கள் குறைப்பிற்கும் நாளில் கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது தேவிரியம்பாக்கம் கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களையும் சேர்த்து 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அவசரத் தேவைக்கு அரசு மருத்துவமனை வசதி இல்லை.கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் உட்பட அனைத்து அவசரத் தேவைகளுக்கும் 7 கி.மி.தூரம் சென்று வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே அவசர அவசியம் கருதி தேவரியம்பாக்கத்தில் விரைவில் அரசின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 260 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்கள்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் வட்டம், கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில், தொழில் தொடங்க 4 பயனாளிகளுக்கு ரூ.6,00,000/- மான்யத்துடன் கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, தாட்கோ மாவட்ட மேலாளர் தேவசுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் அனைத்து சிவாலயங்களிலும் திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமவாரம் கொண்டாடப்படுவது வழக்கம்.

அவ்வகையில், காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் சமேத அக்னீசுவரர் திருக்கோயில்.பழமையான இக்கோயிலுக்கு தினசரி பூஜைகள் நடத்திட ராஜராஜசோழன் நன்கொடை கொடுத்தது இக்கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் கார்த்திகை மாத 2 வது சோமவாரத்தை முன்னிட்டு அக்னீசுவரருக்கு 108 சங்காபிஷேகமும் பின்னர் 36 வகையான சிறப்பு அபிஷேகமும்,அலங்காரமும்,தீபாராதனைகளும் நடந்தன.

காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து வேத விற்பன்னர்கள் ஆலயம் வந்திருந்து சங்காபிஷேகத்தை சிறப்பாக நடத்தினார்கள். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் முன்னாள் ஸ்ரீகாரியம் செல்லப்பா உட்பட சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 28 Nov 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!