/* */

ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்திலுள்ள குறைகளைக் களைய தமிழக அரசுக்கு கோரிக்கை

ஓய்வூதியதாரர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்திலுள்ள குறைகளைக் களைய தமிழக அரசுக்கு கோரிக்கை
X

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க காஞ்சி மாவட்ட பேரவை கூட்டம் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க காஞ்சி மாவட்ட பேரவை கூட்டம் சங்க கூட்ட அரங்கில் மாவட்ட தலைவர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பிச்சை லிங்கம் செயல் அறிக்கையை வாசித்தார்.

இக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.. மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் எம் ஆர்த்தி மற்றும் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் எம் சுதாகர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சுமார் 8 லட்சம் ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தில் மாதம் 350 வசூலிக்க படுவதாகவும் ஆனால் வசூலாகும் தொகையை பயன்படுத்தி பயனாளிகளுக்கு வழங்கும் தொகையில் சராசரியாக 20 சதவீதமே உள்ளது.

மேலும் இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் இட செலவினத்தை கண்காணிக்க அரசு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதில் ஓய்வூதியர் சங்க உறுப்பினர்களை இணைத்து அதில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழக அரசு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ள நிலையில் கொரோனா சிகிச்சை பெற்ற மருத்துவ செலவை 40க்கும் மேற்பட்டோர் மீண்டும் பெற முயற்சித்த போதும் ஒருவரால் கூட பெற இயலவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் வரும் காலங்களில் இது போன்ற நிலை தவிர்க்க அரசு ஓய்வூதியர்களின் வயதை எண்ணி தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு தீர்மானங்கள் கேட்டுக்கொள்கிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சௌதாமாணி சத்தியசீலன் ,துணைத் தலைவர் அண்ணாமலை, தணிகாசலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்..

Updated On: 19 July 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!