/* */

வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

HIGHLIGHTS

வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் துவக்கம்
X

ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி வரும் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

தொடக்க நாளையொட்டி ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் மற்றும் மலையாள நாச்சியார் ஆகியோர் ஆலயத்திலிருந்து ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளினர்.

பின்னர் மீண்டும் ஆலயத்துக்கு திரும்பி வந்து 100 கால் மண்டபத்துக்கு எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.பின்னர் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக வரும் 25 ஆம் தேதி திங்கட்கிழமை மாலையில் மலையாள நாச்சியாரும்,பெருமாளும் ஆஞ்சநேயர் சந்நிதி சென்று வந்த பின்னர் ஆலயத்துக்கு திரும்பி வந்து இருவரும் தனித்தனியாக நான்கு கால் மண்டபத்தில் அமர்ந்து மாலை மாற்றும் வைபவமும் நடைபெறுகிறது.


பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள 100 கால் மண்டபத்துக்கு எழுந்தருளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஊஞ்சலில் அமர்ந்தவாறும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

இதனையடுத்து ஸ்ரீதேவி,பூதேவியர்,மலையாள நாச்சியார்,உற்சவர் வரதராஜப் பெருமாள்,ஆண்டாள் உள்ளிட்ட உற்சவர்கள் அனைவரும் பெருந்தேவித்தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

மறுநாள் 26 ஆம் தேதி அதிகாலையில் பக்தர்களுக்கு விஸ்வருப தரிசனக் காட்சியும் நடைபெறுகிறது. தாயார் சேர்த்தி உற்சவம் எனப்படும் இந்நிகழ்வானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Updated On: 19 March 2024 4:06 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...