/* */

புதுமைப்பெண் திட்டத்தில் உதவிதொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

New Project -புதுமைப்பெண் திட்டத்தில் உதவிதொகை பெற பதிவு செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

New Project | Pudhumai Penn
X

புதுமைப்பெண் திட்டம் குறித்த அரசு விளம்பரம்.

New Project -புதுமைப்பெண் திட்டம் உதவி தொகையை பெற்று பயன் பெற மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை பதிவு செய்யலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் துவங்கப்பட்டது.

இதுவரை 2,3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைத்தளத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இவ் வலைத்தளத்தில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை பதிவு செய்யலாம்.அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No. மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற் கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை-91500 56809; 91500 56805; 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Oct 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  2. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  5. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  6. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  7. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  9. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்