/* */

அடிப்படை வசதிகள் இல்லை : டேக்வுண்டோ வீரர்கள் குற்றச்சாட்டு..!

மாநிலளவில் டேக்வுண்டோ விளையாட்டு வீரர்கள் தேர்வு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் இல்லை : டேக்வுண்டோ வீரர்கள் குற்றச்சாட்டு..!
X

மாநில அளவிலான டேக்வுண்டோ தேர்வு போட்டிகளில் தங்கள் திறமைகளை காண்பிக்கும் வீரர்கள்.

அடிப்படை வசதிகள் இன்றி டேக்வுண்டோ மாநில அளவில் தேர்வு போட்டிகள் நடைபெற்றுவருவதாக டேக்வுண்டோ விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரங்கங்களை பூட்டியதால் போட்டிக்கு வந்த மாணவர்கள் சாலையில் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான டேக்வுண்டோ விளையாட்டிற்கு தமிழக அணி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 2000 மாணவர்கள் ஆண், பெண் என இருபால் பிரிவில் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

போட்டிகள் ஆறு வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் மேல்நிலைக் கல்வி மாணவர்கள் மற்றொரு பிரிவு என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.


69 பிரிவுகளின் கீழ் மாணவ மாணவிகள் இந்த தேர்வு போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில் 7 தேசிய நடுவர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மாணவ , மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்தப் போட்டி தேர்வுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், பல விளையாட்டு அரங்கங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் பூட்டிவிட்டதால் , மாணவர்கள் மர நிழல்களிலும் கால்வாய் ஸ்லாப்புகளிலும் படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

போட்டிகளுக்கு வந்த வீரர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் பெற்றோர்களும் வீரர்களை அழைத்துவந்த ஆசிரியர்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதில் அதிருப்தி ஏற்பட்டு நேற்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் டிசம்பரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொதுவாகவே மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டிகள் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் இந்த போட்டிக்குக் கூட அரங்கங்களை திறக்காமல் மாணவர்களை சாலையில் படுக்க வைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இந்த நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக என்று வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கு செய்துகொடுக்கும் வசதிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக விளங்கவேண்டும்.

தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்றாலும் சில அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றனவா என்றும் அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். சிறிய விமர்சனங்கள் கூட நல்ல பல விளைவுகளுக்கான நற்பெயரை கலங்கப்படுத்திவிடும் என்பதை விளையாட்டுத்துறை அதிகாரிகள் மனதில்கொள்ளவேண்டும்.

Updated On: 30 Sep 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்