/* */

காஞ்சிபுரத்தில் புதிய பேட்டரி காரை அறிமுகம் செய்த எம்.பி, எம்எல்ஏ, மேயர்

சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பேட்டரி மற்றும் பெட்ரோல் என இரு வழிகளில் இயங்கும் புதிய கார் அறிமுகப்படுத்தபட்டுள்ளது

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் புதிய  பேட்டரி காரை அறிமுகம் செய்த எம்.பி, எம்எல்ஏ, மேயர்
X

காஞ்சிபுரத்தில் புதிய ரக குவாலிஸ் காரினை அறிமுகம் செய்த எம்பி செல்வம் , எம்எல்ஏ எழிலரசன் , மேயர் மகாலட்சுமி யுவராஜ்,  ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார்

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில் சாலை வசதிகளும் அதற்கு ஏற்ப மாறி வருகிறது. கடந்த பாரத் பிரதமராக வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தங்க நாற்கர சாலை திட்டம் வரும்போது ஆச்சரியத்துடன் பார்த்த தமிழகம். அதன்பின் சாலை வசதிகளில் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தை ஆண்ட கட்சிகள் சாலை வசதிகளை மேம்படுத்தின.

இதில் ஒரு படி மேலாக திமுக ஆட்சியில் மேம்பாலங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு சாலை வசதி எளிமையாக ஆனதை தொடர்ந்து தமிழகத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை அதிகளவில் காணப்பட்டது.இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் தடம் பதித்து ஆண்டுதோறும் புதிய ரக கார்களை அறிமுகம் செய்து வருகிறது . மேலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உற்பத்தியாகும் வெளிநாட்டு கார்கள் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உலா வருகின்றன. இந்நிலையில்தான் புதிய வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் தற்போது பேட்டரி கார் விற்பனை தமிழகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.

அவ்வகையில் இனி வரும் காலங்களில் காற்று மாசு சூழல் படுவதை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என வாகன உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களில் அரசுகளும் , நீதிமன்றங்களும் அறிவுறுத்தியது.இதனைத் தொடர்ந்து தற்போது புதிய வாகனங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் அடுத்த கட்டமாக எலக்ட்ரிக்கல் வாகனங்கள் உருவாக்கப்பட்டு தற்போது சந்தையில் அதிக வேகமாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் கார் விற்பனையில் முன்னணியில் உள்ள குவாலீஸ் நிறுவனம் தற்போது தமிழக சந்தையில் புதிய ரக சொகுசு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

Urban Cruiser Hyryder எனும் பெயர் SUV சொகுசு காரினை காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் அமைந்துள்ள குவாலிஸ் கார் விற்பனையகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் , காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சி .வி. எம் பி .எழிலரசன் , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் , விற்பனை மேலாளர் பிரபு , தொழில் நுட்ப பிரிவு மேலாளர் ராம் பிரசாத் ஊராட்சி மன்ற தலைவர் இந்தன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

புதிய ரக கார் ஐந்து கதவுகளும், ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உள்ளது. மேலும் இந்த வாகனம் பேட்டரி மற்றும் பெட்ரோல் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வேகத்தில் செல்லும் நிலையில், பேட்டரி மூலம் சார்ஜ் பெற்றுக் கொண்டு வாகனம் இயங்கும் எனவும், குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லும்போது தானாகவே பேட்டரி ஆப் செய்து கொண்டு பெட்ரோல் மூலம் எவ்வித தடையின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முறையாக பராமரிக்கும் நிலையில் பேட்டரி எட்டு வருடம் தங்கு தடை இன்றி செயல்படும் என நிறுவன தொழில்நுட்ப பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் ஆரம்ப விலை 16 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. நான்கு வண்ணங்களில் இந்த வாகனம் வெளியிடப்பட்டுள்ளது.

வாகனத்தின் இருக்கை மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்திலும் பயணிகளின் பாதுகாப்பைகவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.வாகன பராமரிப்பு முறைகள் மற்றும் வாகனங்கள் பழுது நீக்குதல் என அனைத்திற்கும் 24 மணி நேரமும் ஊழியர்களால் ஆலோசனை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 15 Oct 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...