/* */

10 ஆண்டு வீதியில் கத்தியிருக்கிறேன் : சீமான் உருக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

HIGHLIGHTS

10 ஆண்டு வீதியில் கத்தியிருக்கிறேன் : சீமான் உருக்கம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம் , வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

காஞ்சிபுரத்தில் பேசியபோது , 'கடந்த பத்தாண்டுகளாக 6 ஆயிரம் மணி நேரம் நெஞ்சு வெடிக்க, ரத்தம் வேர்வையாக உடம்பெல்லாம் உப்பு பூக்க பல்வேறு வீதிகளில் நின்று உங்களுக்காக கத்தியிருக்கிறேன். நாங்கள் கையேந்தி கேட்பது வாக்குகள் அல்ல. தம்பிகளின் தங்கைகளின் வாழ்க்கை நலனுக்காக. கடந்த பல ஆண்டுகளாக தேர்தலில் மாறிமாறி ஓட்டு போட்டு ஏமாந்த நிலையில், எல்லா கட்சிகளும் தற்போது கூட்டணிக்காக அலைந்து கொண்டு நோட்டு பேரம் , சீட்டு பேரம் என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில் நான் உங்களுக்காக வீதியில் கத்தி பேசிக்கொண்டிருக்கிறேன்.

முழுக்க முழுக்க 100% மக்களை நம்பி அசைக்க முடியாத நம்பிக்கையில் தனித்து போட்டி இட வருகிறேன். எனவே, இதையெல்லாம் புரிந்துகொண்டு மாற்றம் ஏற்படுத்த வரும் எங்களுக்கு நம்பிக்கையுடன் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 10 March 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...