நில அளவை அலுவலர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நில அளவை அலுவலர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
X

காஞ்சிபுரம் மாவட்ட நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட  பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜெ. ராஜா பேசினார்.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு என்ற சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காஞ்சி மாவட்ட தலைவர் ஆ. ராமச்சந்திரன் தலைமையில் காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ராஜா ஜோதி முன்னிலை வகிக்க கோட்டக் கிளை தலைவர் ரா. செல்வகணபதி வரவேற்புரை ஆற்றினார்.

மாநில செயலாளர் பேபி காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்ட விளக்க உரையாற்றினார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில நில அளவையர் அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில தலைவர் ஜெ. ராஜா, மாநில பொது செயலாளர் அண்ணா குபேரன் ஆகியோர் கலந்து கொண்டு தற்போதைய நிலை குறித்து அலுவலர் சங்க உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தும் , வருங்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

இதனை தொடர்ந்து கோட்ட கிளை செயலாளர் கே.கங்காதரன் தீர்மானங்களை படித்தார்.

இக்கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தரமிறக்கப்பட்ட பராமரிப்பு குறுவட்ட அளவர் பணியிடங்களை மீண்டும் வழங்கவேண்டும். ஒரு குறுவட்டத்திற்கு இரண்டு புல உதவியாளர் பணியிடங்களை ஏற்படுத்தவேண்டும். நீண்ட நாள் கோரிக்கையான வட்ட துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகளை கலைந்திடவேண்டும்.

போராடிப் பெற்ற எப்.டி.ஏ.வை உடனடியாக களப்பணியாளர்களுக்கு வழங்கிடவேண்டும். அனைத்து புள்ளி விவரங்களும் ஆன்லைனில் உள்ள நிலையில் தினசரி புள்ளி விவரங்களை களப்பணியாளர்களிடம் கேட்டு பெறுவதால் மற்ற பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே ஆய்வு கூட்டங்களில் ஆன்லைனில் புள்ளிகளை எடுத்து ஆய்வுக் கூட்டம் நடத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஜி.எல்.ஆர்.போர்டல் லாகின் இல்லாத நில அளவைத் துறையினரை அதையும் பராமரித்து ஆய்வு கூட்டங்கள் கேட்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதனை வரும் ஆய்வு கூட்டங்களில் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பல்க் லேஅவுட் என்பதில் நெறிமுறை இல்லாததால் இதில் பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இதற்கு உட்பிரிவு கட்டணம் செலுத்தும் போது அதை உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த மறுக்கின்றனர். மேலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சில இடங்களுக்கு கட்டணம் செலுத்தி அங்கீகாரம் செய்த பின் மீண்டும் பதிவுத்துறையால் இதே உட்பிரிவிற்கு கட்டணம் அங்கும் செலுத்த நிர்ப்பந்திப்பதாலும், அதற்கு பட்டா மாற்றம் செய்யாமல் கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்புவதாலும் அந்த உரிமையாளர் எங்களிடமிருந்து கடுமையான வாக்குவாதம் மேற்கொள்கின்றனர்.

இதனால் ஆய்வு கூட்டங்களில் முறையான நெறிமுறை வழங்கி பின்பு ஆய்வுக் கூட்டங்களில் இதற்கான புள்ளி விவரங்களை அல்லது செய்மானம் கேட்கலாம்.

பல்வேறு காரணங்களால் DTCP ஒப்புதல் அளிப்பதற்கு முன் வட்டாட்சியர் அலுவலகம் கோப்பினை அனுப்பி பிரி நோட்டிவேஷன் மூலம் உட்பிரிவு செய்து தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் உரிமையாளர்கள் பெயரிலே வைக்கலாம்.

மேலும் அரசு பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் சாலை, பூங்கா, சமுதாயக்கூடம் மற்றும் மின்வாரிய நிலையம் ஆகியவற்றை பூஜ்ஜியம் பட்டாவாக வைக்கலாம்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மாவட்ட இணை செயலாளர்எஸ்.அசோக்குமார் நன்றியுரை தெரிவித்தார்.

Updated On: 1 Dec 2022 8:00 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...