/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ஓராண்டு சாதனைகள்: கையேடு வெளியீடு

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஓராண்டில் பொதுமக்களுக்கு செய்த பணிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ஓராண்டு  சாதனைகள்: கையேடு வெளியீடு
X

காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஓராண்டில் அரசின் அரும்பணிகள் என்ற  கையேடு வெளியீட்டு விழாவில்,மேயர் மகாலட்சுமி யுவராஜ்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் புதிய பணிகள் குறித்த விளக்கங்கள் குறித்த கையேடு, 'ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு' எனும் தலைப்பின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் , மேயர் மாகலட்சுமியுவராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து வெளியிட்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக செய்யப்பட்ட பணிகள் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதன்படி, ரூ. 3.375 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் சீர்மிகு சாலைகள், ரூ. 75 லட்சம் மதிப்பில் சம்பந்த மூர்த்தி நகர் பூங்கா, ரூ. 2.50 கோடி மதிப்பில் பி.எஸ். சீனுவாசன் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அறிவுசார் மையம் ஏழு கோடி மதிப்பீட்டில் ராஜாஜி மார்க்கெட் பகுதி மேம்படுத்துதல்

ரூ. 33 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ரூ. 120 கோடி மதிப்பில் கூடுதல் குடிநீர் வழங்க பணிக்கு நிதி ஒதுக்கீடு, ரூ.1.2 கோடி மதிப்பில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் ஒப்பேரி குளம், ஓரிக்கை ஏரி நீர் நிலை மேம்பாடுகள், ரூ. 2.5 கோடி மதிப்பில் நவீன மின் மயான தகன மேடை, ரூ. 11.20கோடி மதிப்பில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம், ரூ.20 கோடி செலவில் புதிய காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக கட்டிடம், ரூ. 6.4 கோடி மதிப்பில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் தங்கும் கட்டிடம் , ரூ. 35 கோடி மதிப்பில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்டவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 May 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை