/* */

காஞ்சிபுரம்: அரசு நேர கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த 25 பேர் மீது வழக்கு

தீபாவளி நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: அரசு நேர கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த  25 பேர் மீது வழக்கு
X

அரசு விதிகளை மீறி தொடர் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடித்த போது ,  புகை சூழ்ந்த காட்சி.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காற்று மாசு மற்றும் ஒலி கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலும் கடந்த இரு மாதங்களாகவே பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு பசுமை பட்டாசுகளை தயாரிக்குமாறு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அதிக புகை மற்றும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்க வேண்டாம் என அரசு அறிவித்து இருந்தது.

மேலும் தமிழக அரசு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் ஏழு மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இதை அனைத்துமே தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் சற்றும் விதிமுறைகளை பின்பற்றாது பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

பட்டாசு வெடிப்பதன் மூலம் மாசுக்கட்டுப்பாடு தர அளவு மெல்ல மெல்ல காலை முதலே உயர்ந்து கொண்டு நள்ளிரவில் வாகனம் ஓட்டிகள் வாகனம் செலுத்த முடியாத அளவிற்கு புகை மண்டலமாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் காட்சியளித்தது.

இந்நிலையில் தமிழக முதல் நேரக் கட்டுப்பாடு மற்றும் அதிக ஒலி மற்றும் மாசுகளை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டம் அதிகாலை 4 மணி முதல் களைகட்ட துவங்கியது. இருப்பினும் மாலை 6 மணி முதல் இரவு 11 வரை எவ்வித அரசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்படாமல் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்ததன் காரணமாக காஞ்சி நகரம் முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீபாவளி நாளன்று நான்கு இடங்களில் பட்டாசு காரணமாக சிறு தீ விபத்து ஏற்பட்டது.மேலும் காவல்துறை மாவட்டம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறதா எனத் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அரசு கட்டுப்பாடு நேர விதிகளை மீறி பட்டாசுகள் பிடித்த இருபத்தைந்து நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய அளவில் பொதுமக்களுக்கு தீக்காயங்கள் ஏற்படவில்லை என்பதும் வாகன விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏதுமில்லை என்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு அளித்தும், இது போன்ற விதிமுறைகளையும் மீறி தமிழகம் முழுவதும் வழக்கு பதிவுகள் செய்யப்பட்ட நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக பட்டாசு ஒலிகளும் புகைகளும் நகரை சூழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல விடுமுறை நாட்களுக்கு சென்ற பயணிகள் வாகன நெரிசலின்றி பயணிக்கும் வகையில் வீடு திரும்ப ஏதுவாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்ததும் கடைசி நேரத்தில் தங்கள் பயணத்தை துவங்கியதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனம் நெரிசல் மாலை நாலு மணி முதலே காணப்பட்டு வருகிறது.

காவல்துறை சார்பாக வாகன நெரிசலி கட்டுப்படுத்த முக்கிய பகுதிகளில் காவல்துறை தங்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு மெல்ல மெல்ல நெரிசலை குறைத்துக் கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Oct 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!