/* */

காஞ்சிபுரம்: மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பள்ளிக்கு பாதுகாப்பு

காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளியில் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பள்ளிக்கு பாதுகாப்பு
X

காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தனியார் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ளது பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

மாணவர்களின் ஒழுக்க நெறியில் மிகவும் கண்டிப்பாக செயல்படுவதாக கூறப்படும் நிலையில் , நேற்று மாலை இப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு பையிலும் ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவன் வகுப்பறையில் ஓழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பின் வகுப்புக்கு செல்லும் நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டான்.

நல்வாய்ப்பாக பாதம் மற்றும் தலையில் லேசான காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் மாணவன் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததை பார்த்த பிற மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என இருந்தும் பள்ளி நிர்வாகம் தவறி விழுந்ததாக கூறியதை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இங்கும் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பள்ளி மாணவன் சென்னையில் சிகிச்சை பெற்றுள்ளதாகும் சற்று உடல்நலம் தேடி பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.


Updated On: 19 July 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  7. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  8. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  9. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  10. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...