/* */

ஏகாம்பரநாதரை வரவேற்ற காமாட்சியம்மன்: அதிசய நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசம்

பண்டிகை நாட்களில் மனிதர்கள் கூடி உறவுகளை புதுப்பித்துக் கொள்வது போல், தெய்வங்களும் பண்டிகை நாட்களில் சந்தித்த காட்சியளித்தது பக்தர்களை பரவசபடுத்தியது.

HIGHLIGHTS

ஏகாம்பரநாதரை வரவேற்ற காமாட்சியம்மன்: அதிசய நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசம்
X

தீபாவளி திருநாளை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஏகாம்பரநாதர் உடனுறை ஏலவார்குழலி ஆகிய மூவரும்  ஒரே நேரத்தில் வீதி உலா வந்த அதிசய காட்சி .

பண்டிகை நாட்களில் மனிதர்கள் கூடி உறவுகளை புதுப்பித்துக் கொள்வது போல், தெய்வங்களும் பண்டிகை நாட்களில் சந்தித்த காட்சியளித்தது பக்தர்களை பரவசபடுத்தியது.

தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை என்றாலே அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் அதனை வெளிப்படுத்துவதே ஆகும்.

இது மட்டும் இல்லாமல் உறவுகளை ஒரே இடத்தில் சந்தித்து தங்கள் அன்புகளை பரிமாற்றிக் கொண்டு மீண்டும் உறவுகளை புதுப்பித்துக்கொள்ள பெரிதும் இது போன்ற பண்டிகைகள் உதவுகிறது. அவ்வகையில் தீபாவளி பண்டிகை என்பது அனைவராலும் ஒருங்கிணைந்து கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

அதிகாலை எழுந்து நீராடி அதன் பின் இனிப்புகள் மற்றும் உணவுகள் தயார் செய்து குடும்பத்துடன் தங்களது தெய்வங்களுக்கு படையெடுத்து அதை அனைவரும் கூடி உணவருந்தும் அந்த தருணம் என்ற மகிழ்ச்சியை தரும்.

இந்த திருநாளை ஒட்டி தெய்வங்களும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை காண அவர்களை தேடி வீதி உலா வந்து மேலும் அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செயலாக அமைந்து வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் இன்று சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் தீபாவளி திருநாளை ஒட்டி லட்சுமி சரஸ்வதி உடன் கோயில் கோபுர வாசலில் எழுந்தருள பட்டாசுகள் வெடித்து நான்கு ராஜ வீதியில் காலை 8 மணிக்கு உலா வரத் தொடங்கினர்.

இதேபோல் காஞ்சிபுரம் பஞ்சபூத தலங்களில் ஒன்றான அருள்மிகு ஏலவார்குழலி‌ உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் எழுந்தருளி மேல தாளங்கள் முழங்க ராஜ வீதியில் பக்தர்களுக்கு அருள் பாதிக்க வலம் வந்தார்.

காஞ்சி சங்கரமடம் அருகே காமாட்சி அம்மனுக்கு சங்கரமடம் சார்பில் சிறப்பு தீபாராதனை நடைபெற்று மீண்டும் உலா வர வெளியே வந்த போது, வலது திசையில் இருந்து ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்க்குழலி வருகை தந்த போது அவரை வரவேற்கும் விதமாக காமாட்சி அம்மன் நின்று இருந்த காட்சியும்‌, அதன்பின் அனைத்து தெய்வங்களும் ஒரு சேர ராஜ வீதியில் வலம் வர பக்தர்களுக்கு அதிர்ச்சியாகும் காணக் கிடைக்காத காட்சியாகவும் இருந்ததால் பரவசத்தில் பக்தர்கள் அனைத்து தெய்வங்களையும் வணங்கி இன் நன் நாளில் அருள் பெற்றனர்.

ஆண்டுதோறும் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரம்மோற்சவம் நடைபெறும் வைபவத்தில் திருக்கல்யாணம் என்று காமாட்சி அம்மன் ஏகாம்பரநாதரை சந்திப்பது மட்டுமே வழக்கம்.

எப்போதும் திருக்கோயில்களில் பிரம்மோற்சவ விழா நடைபெறும் நேரங்களில் சாமி வீதி உலா நடைபெறும். அச்சமயம் வேறு எந்த திருக்கோயில்களிலும் விழாக்கள் நடைபெறாது. இன்று தீபாவளி திருநாளையொட்டி திடீரென இரு திருக்கோயில் வீதியுலாவில் உற்சவமூர்த்திகள் சந்தித்துக் கொண்டது காண கிடைக்காது காட்சி.

தீபத் ஒளி திருநாள் பண்டிகை மனிதர்கள் ஒன்றிணைவது போல், தெய்வங்களும் கூடி ஒன்றிணைந்தது அதிசய நிகழ்வாக காஞ்சியில் நடைபெற்றது.

Updated On: 24 Oct 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!