/* */

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட கலைச்செல்வி அறுபத்தி நான்காவது மாவட்ட ஆட்சியர் ஆவார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் பொறுப்பேற்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்ற கலைச்செல்வி மோகன்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக கலைச்செல்வி மோகன் பொறுப்பேற்ற பின் அனைத்து தரப்பு மக்களுக்கும், அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய பாடுபடுவேன் என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் என இரு வருவாய் கோட்டங்களும் காஞ்சிபுரம் பெரும்பத்தூர் குன்றத்தூர் உத்திரமேரூர் வாலாஜாபாத் என ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களுடன் 274 கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த டாக்டர் மா ஆர்த்தி கடந்த 16ஆம் தேதி அனைவருக்கும் கல்வித் திட்டம் இயக்கக திட்ட இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய மாவட்ட ஆட்சியராக நில கண்காணிப்பு கூடுதல் இயக்குனராக இருந்த கலைச்செல்வி மோகன் நியமிக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட கலைச்செல்வி மோகன் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் , அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை சென்றடைய பாடுபடுவேன் என தெரிவித்தார்.

புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற கலைச்செல்வி மோகன் மரியாதை நிமித்தமாக பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் செய்து வரும் நிலையில் அதனை இவர் திறமையுடன் கையாள வேண்டிய நிலையில் உள்ளது.

Updated On: 25 May 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  3. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  9. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?