/* */

கச்சபேஸ்வரர் : கடை ஞாயிறு நேர்த்திகடன் ஏராளமான பக்தர்கள் செலுத்தினர்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைஞாயிறு விழாவில் பக்தர்கள் மண்டை விளக்கு தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்தினர்.

HIGHLIGHTS

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல பிரசித்திபெற்ற திருக்கோயில்கள் நோய் தீர்க்கும் திருத்தலங்களாக விளங்கி வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் தங்களது தலை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீர பக்தர்கள் மாவினால் அகல் விளக்கு தயார் செய்து அதில் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்..

கடந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவ்விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து செயல்படுத்தியது.

தற்போது இந்த ஆண்டு பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்த நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றி அரசு வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து அறிவிப்பு பலகைகள் கோயில் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 7 மணி முதலே சிறப்பு பூஜைகளுடன் கடை ஞாயிறு முதல் வார விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து அரிசி மாவினால் விளக்குகள் தயார் செய்து விநாயகர் மற்றும் கொடிமரம் அருகே அர்ச்சனைகள் மேற்கொண்டு அதன் பின் தீபம் ஏற்றி தலையில் வைத்து அவரை கோயில் பிரகாரங்களில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தி நோய் தீர்க்க வேண்டுதலுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை வழிபாடு மேற்கொண்டனர்.

பொதுமக்கள் அதிக அளவில் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக கோயில் பணியாளர்கள் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் வழிகாட்டு நெறிமுறைகளையும் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு பலகைகள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் செயல் அலுவலர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது..

Updated On: 22 Nov 2021 4:41 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  5. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  7. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  8. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  10. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு