/* */

காஞ்சிபுரத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா

காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் சார்பில் ஐந்து நாள் நடைபெறும் கண்காட்சியை எழிலரசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா
X

காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் சார்பில் நடைபெறும் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்த போது உடன் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் சசிகலா.

காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் சார்பில் நடைபெறும் மாவட்ட கைத்தறி கண்காட்சியினை சட்டமன்ற உறுப்பினர் ஏழிலரசன் துவக்கி வைத்து , கைத்தறி கூட்டுறவு அரங்குகளை பார்வையிட்டார்.

இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் கைத்தறி அபிவிருத்தி ஆணைய அலுவலகம் , காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் சார்பில் மாவட்ட கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவங்கியது.


இந்த கண்காட்சி நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அதன் உற்பத்தி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இன்று துவங்கி வரும் 22ஆம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாள் கண்காட்சியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


மேலும் அரங்கத்தில் அமைக்கப்பட்ட கைத்தறி அரங்குகளில் உற்பத்தி நிலையினை கேட்டறிந்து சேலை , டவல் , கைவினை பொருட்கள் உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்தார்.

இக்கண்காட்சியில் கோ - ஆப்டெக்ஸ், கரூர், கடலூர் , திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராம்நாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இதில் ரூ 1500 முதல் கைத்தறி சேலைகள் கைத்தறி சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக் கைத்தறி கண்காட்சி துவக்க விழாவில், நெசவாளர் சேவை மைய இணை இயக்குனர் சசிகலா, கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணை இயக்குனர் நாகராஜன் , தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழக உதவி மேலாளர் சுப்பிரமணியன் , திமுக நிர்வாகிகள் திலகர் , ஓன்றிய கவுன்சிலர் பிரசாத் என பலர் கலந்து கொண்டனர் .

Updated On: 18 Oct 2023 9:37 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  7. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  10. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?