/* */

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி

மளிகை பொருட்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து, சிலிண்டர் விலை உயர்ந்ததால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி
X

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் அவ்வப்போது உயர்ந்து கொண்டிருந்தது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாத நிலையில் இன்று வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ 50 உயர்ந்துள்ளது.

நேற்று ரூ.967 க்கு விற்பனை செய்யபட்ட நிலையில் இன்று ரூ 1,017 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோக டெலிவரி சார்ஜ் ரூ30 பெறும் நிலையில் தற்போது மொத்தமாக ரூ1,050 அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

வணிக எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.2250 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மளிகை பொருட்கள், சமையல்‌ எண்ணெய், அரிசி என அனைத்தும் 20 சதவீத விலையேற்றம் கண்ட நிலையில், இன்று சிலிண்டர் விலையும் உயர்ததுள்ளது, நடுத்தர குடும்ப மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் தொடங்கி நகர்புற மக்கள் வரை இலவச எரிவாயு எனும் திட்டத்தின் கீழ் சிலிண்டர் அடுப்பு வழங்கி மக்களை சோம்பேறி ஆக்கிவிட்டு தற்போது மெல்ல மெல்ல விலையேற்றத்தை அளித்து வருகின்றனர். வாழ்வாதாரம் மேம்பட கூலி உயர்வு, சம்பள உயர்வு என்றும் ஏதும் இல்லாத இந்த நிலையில் இது நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வை பெரிதும் பாதிக்கும் என தெரிவித்தனர்.

Updated On: 7 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு