/* */

சேதமடைந்த பாலாற்று பாலத்தில் சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்

காஞ்சிபுரம் அருகே பாலாற்று மேம்பாலம் இரு வேறு இடங்களில் 1 கிமீ தூரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

சேதமடைந்த பாலாற்று பாலத்தில் சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்
X

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள பாலாற்று பாலத்தில் ஏற்பட்ட சேதங்களை புணரமைக்கும் நெடுஞ்சாலை துறையினர்.

காஞ்சிபுரம் அருகே காஞ்சிபுரம் - உத்திரமேரூர்( கீழ் ரோடு ) சாலை, காஞ்சிபுரம் வந்தவாசி சாலை என இரு வேறு இடங்களில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது.

இப்பாலத்தினால் பேரிடர் காலங்களிலும் வெள்ளப்பெருக்கு காலங்களில் எந்தவித இடையூறு இன்றி பல்வேறு பகுதிகளுக்கு இவ்வழியாக பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை பாலாற்று பாலத்தில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு வாகனங்கள் பயணிக்க சற்று சிரமமாக இருப்பதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக குழிகளை சரிசெய்து, தகுந்த பாதுகாப்புடன் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு மீண்டும் சாலையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இச்செயலைப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் வரவேற்றனர்

Updated On: 30 July 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?