/* */

காஞ்சிபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்பட்ட 230 மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்பட்ட  230 மனுக்கள்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை அளித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 230 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, பாதுகாவலர் நியமன சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஸ்ரீதரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Nov 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...