/* */

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு முதல் கட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
X

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பில், தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள ஊழியர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு அலுவலருக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி பார்வையிட்டு ஊழியர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்த விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைத்துத் துறைகளிலிருந்தும் மொத்தம் 6800 அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்குக்கான முதற்கட்ட பயிற்சிகள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

சென்னை கன்டோன்மென்ட் பகுதி புனித மான்போர்ட் பள்ளி, பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளி மற்றும் காஞ்சிபுரம் SSKV மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சியில் தேர்தல் பணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்

திருப்பெரும்புதூர் வட்டம், பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு அலுவலருக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயிற்சி குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் தேர்தல் விதிமுறைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளையும் ஆட்சியர் அலுவலர்களுக்கு வழங்கினார். எவ்வித சலசலப்புக்கும் இடமளிக்காமல் அனைவரும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இவ்ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 24 March 2024 2:08 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்