/* */

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கருவறை

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்.

HIGHLIGHTS

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கருவறை
X

காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சி

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்.

முழு முதற் கடவுள் என இந்துக்களால் கூறப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் முக்கிய பண்டிகை ஒன்றான விநாயகர் சதுர்த்தி வீடுகளில் களி மண்ணால் உருவாக்கப்படும் விநாயகர் பெருமான் உருவம் வாங்கி வரப்பட்டு குடை எருக்கம் பூமாலை , அருகம்புல், உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டு அவள் கொய்யாப்பழம் கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு படையல் இட்டு விநாயகரை வழிபடுவது வழக்கம்.

இதேபோல் விநாயகர் திருக்கோயில் காலை பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.

அவ்வகையில் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் திருக்கோயில் காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன்பின் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் விநாயகர் கருவறை அலங்கரிக்கப்பட்டு வெள்ளி கவசத்துடன் சிறப்பு தீபாராதனையில் விநாயகர் அருள் பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிபட்டு சென்றனர். விழாவினை ஒட்டி புளியோதரை சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் உள்ளிட்டவைகள் பிரசாதங்களாக பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.

இதேபோல் காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி பாரதி ஜனதா கட்சி மற்றும் விநாயகர் திருக்கோயில் இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 18 Sep 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு