/* */

காஞ்சியில் நான்கு முனை போட்டி! ஜெயிக்கப் போவது யாரு ?

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக , அதிமுக , பாமக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது

HIGHLIGHTS

காஞ்சியில் நான்கு முனை போட்டி! ஜெயிக்கப் போவது யாரு ?
X

காஞ்சி நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடும் வேட்பாளர்கள்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி 2008க்கு பிறகே உருவானது. அதற்கு முன்பு வரை செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்து வந்தது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பொறுத்த வரை சுற்றுலா, விவசாயம், கல்விசாலை , தொழில்நுட்ப வளாகம் என பலவகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு வாய்ந்தது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 8 லட்சத்து 86 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 46 ஆயிரத்து 16 பெண் வாக்காளர்களும், இதர 294 என மொத்தம் 17 லட்சத்து 32 ஆயிரத்து 946 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை காஞ்சிபுரம், உத்திரமேரூர் என சட்டமன்ற தொகுதிகளும் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் , செய்யூர் , திருப்போரூர் என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் என மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இந்த இரு மாவட்டங்களில் இணைந்த நாடாளுமன்ற தொகுதி எல்லையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூட்டணிகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிமுக , திமுக , பாமக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப்போட்டி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உருவாக்கியுள்ளது.

திமுக , காங்கிரஸ் , விடுதலை சிறுத்தை மதிமுக , கம்யூனிஸ்ட் என பலமான கூட்டணிகளின் சார்பில் திமுக வேட்பாளர் செல்வமும் , அதிமுக தேமுதிக கூட்டணிகள் சார்பாக பெரும்பாக்கம் ராஜசேகர் என்பவரும் , பாஜக பாமக கூட்டணியில் ஜோதி வெங்கடேஷ் என்ற பெண் வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி சார்பாக சந்தோஷ் குமார் என்பவரும் போட்டியிட உள்ளதாக அந்தந்த அரசியல் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

இருமுனை , மும்மனைப் போட்டிகள் இருக்கும் என கணிப்புகள் கூறி வந்த நிலையில் , தற்போது நான்கு முனை போட்டி நிலவுவதும், பொது மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் என்ன என்பதையும் வேட்புமனு திங்கள் கிழமை தாக்கல் செய்ய உள்ள வேட்பாளர்கள் அறிவிப்பார்கள் எனவும் தெரியவந்த நிலையில் காஞ்சி வெல்லப் போவது யார் ? என்ற கேள்வி அனைவரும் முன் எழுந்துள்ளது.

Updated On: 22 March 2024 5:45 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு