/* */

இ- பாஸ் வாகன சோதனைகள் தீவிரம்..

இ -பாஸ் பதிவு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் காஞ்சிபுர மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை

HIGHLIGHTS

இ- பாஸ் வாகன சோதனைகள் தீவிரம்..
X

தமிழகத்தின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் மாவட்டங்களுக்கு இடையே செல்லவும் பதிவு முறை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட எல்லைப் பகுதிகளான பெருநகர், தாமல் , செவிலிமேடு , செட்டிபெடு, மணிமங்கலம் உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்டத்திற்குள் நுழையும் அனைவரையும் அனுமதிசீட்டு கேட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

திருமணம் , நெருங்கிய உறவினர் இழப்பு , மருத்துவ சிகிச்சை , முதியோர் நலன் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை உடனே அனுப்பி வைத்தும், அனுமதி சீட்டு அல்லாத வாகனங்களை மாவட்டத்தில் நுழைய அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பியும் வருகின்றனர்

இப்பதிவு அமுல்படுத்தப்பட்ட முதல் நாளான நேற்று பலர் பதிவுபெற முடியாததால். இப்பதிவு இல்லாமல் வந்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலர் இப்பதிவு பெற்றதை தங்களது கைப்பேசியில் வைத்துக்கொண்டு கைபேசியை காண்பித்து பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

Updated On: 18 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  4. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  9. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  10. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?