/* */

ரூ 10.96 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்களை வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் ரூ 10.96 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்கள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

ரூ 10.96 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்களை வழங்கிய  ஆட்சியர் கலைச்செல்வி
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிக்கு பயிர் கடன் வழங்கிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ரூ.10.96 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் வேளாண் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலைச்செல்வி வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட

ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை துறை சார்பில், 1 விவசாய பயனாளிக்கு ரூ.830/- மானியத்தில் தார்பாலினும், 2 விவசாய பயனாளிக்கு ரூ.6,000/- மானியத்தில் விசை தெளிப்பான்களும், 1 விவசாய பயனாளிக்கு ரூ.2,000/- மானியத்தில் மின்கலன் தெளிப்பானும், 1 விவசாய பயனாளிக்கு ரூ.2,500/- மானியத்தில் நேரடி நெல் விதைப்பான் , தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.2,94,157/- மானியத்தில் காளான் குடில் பணி ஆணைகளும் மற்றும் சொட்டு நீர் பாசனம் பணி ஆணையினையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலம் 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4,06,522/- மதிப்பீட்டில் பயிர் கடன்களும், 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.2,38,000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன்களும், 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.1,46,000/- மதிப்பீட்டில் மீன் வியாபார கடன்களும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் முனைவர்.பிரின்ஸ் கிளமென்ட், வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Nov 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...