/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

மேயர் மகாலட்சும தலைமையில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
X

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூறிய புகாருக்கு பதில் அளித்து பேசிய பணி குழு தலைவர் சுரேஷ். 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நல திட்டங்களை புறக்கணிப்பதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.

அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தங்கள் வார்டுகளை புறக்கணிப்பதாக கூறிய நிலையில் அவர்களை சமாதானம் படுத்தி அமர்ந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி பணிக்குழு தலைவர் சுரேஷ், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் பணிகள் குறைவாக நடைபெறுவதாக கூறிய குற்றச்சாட்டை மறுத்து , கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதால் அனைவரும் அறிந்து கொள்ள உங்கள் என தெரிவித்து பட்டியலிட்டார்.


இதில் கடந்த 2022- 2023 ஆம் ஆண்டு வரை கலைஞர் புறநகர் மேம்பாட்டு திட்டம், SFC ஆறாவது மானிய நிதிக்குழு திட்டம், NSMT நகர்ப்புற சாலை திட்டம் என இதுவரை சுமார் ஆறு கோடியே 35 லட்சத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்டு வாரியாக செலவிடப்பட்ட தொகை பணிகள் குறித்து தங்களுக்கு தர தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அ.தி.மு.க., பா.ம.க. சுயேச்சை பா.ஜ.க. என அனைத்து உறுப்பினர்களின் வார்டு பகுதிகளிலும், அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே பணிகள் நடைபெற்று வருவதும் , இவை அனைத்தும் அரசு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் நிலையில் இதை குற்றச்சாட்டாகவே தெரிவிப்பது முறையல்ல என தெரிவித்தார்.

இவர் இந்த விளக்கங்களை அனைத்தும் அளிக்கும் போது அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

குற்றச்சாட்டு கூறும் நபர்கள் மாமன்ற கூட்டத்தில் அதன் நகலை பெற்று முறையாக விவாதித்தால் மட்டுமே பொதுமக்களுக்கு அது தவறா அல்லது உண்மையா என்பது தெரியவரும் நிலையில், அவர்களின் செயலால் பொதுமக்களும் தவறான புரிதல் அடைய வேண்டிய நிலையை ஏற்படுகிறது.

Updated On: 29 July 2023 6:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு