/* */

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. 51- வது ஆண்டு விழாவையொட்டி அன்னதானம்

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. 51- வது ஆண்டு விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. 51- வது ஆண்டு விழாவையொட்டி அன்னதானம்
X

காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அண்ணாவின் கொள்கை ஈர்ப்பால் புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டு தி மு க. பொருளாளராக இருந்து கட்சிப் பணிகளையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில் பொதுக்குழுவில் கணக்கு கேட்டதற்காக கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் 1972 ல் அண்ணாவின் உருவம் குறித்த கொடியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை எம். ஜி. ஆர் .துவக்கினார். எம்.ஜி.ஆர். மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் தொடர்ந்து எல்லா தேர்தல்களிலு் அதிமுக பெற்றி பெற்றது. தனது இறுதி காலம் வரை எம்ஜிஆர் முதல்வராக இருந்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கழகக் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றி வந்த ஜெ. ஜெயலலிதா தலைமை பொறுப்பை ஏற்று அதன் பின்னும் தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம், திருமணத்திற்கு தடையாக இருந்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் , திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெரும் வரவேற்பை பொதுமக்களிடையே பெற்றது. அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை கடந்த 17ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. கொடி ஏற்றி பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் 14வது வார்டு கச்சபேஸ்வரர் நகர் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் கோபால் ஏற்பாட்டில் , மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கொடி ஏற்றி அன்னதானத்தை வழங்கினார்.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் காஞ்சி மாவட்ட செயலாளருமான வி. சோமசுந்தரம் , தற்போதைய தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நேரத்தில் குறித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் பொதுமக்களுக்கு எதிராக பால் விலை, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என பல நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆர். டி.சேகர், மாவட்ட பாசறை செயலாளர் வி. ஆர். மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் படுநெல்லி தயாளன்,பகுதி கழக செயலாளர்கள் என்.பி.ஸ்டாலின், ஜெயராஜ், கோல்டு ரவி,மாமன்ற உறுப்பினர்கள் சண்முகானந்தம், சிந்தன், வட்ட செயலாளர் ஆறுமுகம் , முன்னாள் கவுன்சிலர் விநாயகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Nov 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு