/* */

கண்ணைக்கட்டி விளையாட்டு : ஒரு பெண்ணின் சாதனை

சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பெண் 155 அடி மலையை கண்களை கட்டி இறங்கி சாதனை.

HIGHLIGHTS

கண்ணைக்கட்டி விளையாட்டு : ஒரு      பெண்ணின் சாதனை
X

சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான பெண் முத்தமிழ்செல்வி 155 அடி உயரமுள்ள மலையை கண்களை கட்டிக்கொண்டு இறங்கி சாதனை படைத்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைப்பட்டு பகுதியில் 155 உயரமுள்ள மலையின் மேலிருந்து கண்களை கட்டிக் கொண்டு 58 வினாடிகளில் கீழே இறங்கி மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த முத்தமிழ் செல்வி வயது 32 உலக சாதனை படைத்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகசாதனை படைத்த முத்தமிழ் செல்வி கூறுகையில் , 'இந்த சாதனையை மகளிர் தினத்தை முன்னிட்டு செய்தேன். மகளிர் நினைத்தால் எதுவும் சாதிக்க முடியும். ஆனால், ஆண்கள் கண்களை திறந்து பெண்களை பார்க்கவேண்டும்.கண்களை மூடிக்கொண்டு பெண்களுக்கெதிரான வன்முறைகளை செய்கிறார்கள். இதை வலியுறுத்தி தான் இந்த சாதனையை செய்தேன்.' இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே வாரத்தில் பயிற்சி பெற்று இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. யூனிக்கோ வேர்ல்ட் ரெகார்ட் சார்பாக உலக சாதனை படைத்த இளம்பெண் முத்தமிழ் செல்விக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.

Updated On: 7 March 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!