/* */

விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தேவை: கிராம ஊராட்சி சார்பாக ஆட்சியரிடம் மனு

முத்தியால்பேட்டை - ராஜகுளம் சாலையில் களியணூர் கிராம சாலையில் வேகத்தடை சாலை ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்ட கோரிக்கை

HIGHLIGHTS

விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தேவை: கிராம ஊராட்சி  சார்பாக ஆட்சியரிடம் மனு
X

: மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையை இணைக்கும் புறவழி சாலையாக களியனூர் சாலை அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் நகரிலிருந்து பொதுமக்களும் வேலூர் பகுதியில் இருந்தும் வரும் பொதுமக்கள் செங்கல்பட்டு வழியாக சென்னை - திருச்சி சாலையில் இணைவதற்கு போக்குவரத்து நெரிசலற்ற புறவழி சாலையாக உள்ளதால் அதிக வாகனங்கள் 24நேரமும் பிஸியாகவே இதில் பயணிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக களியனூர் ஊராட்சி பகுதிகளில் வளைவுகள் , பள்ளிகள் மற்றும் கிராம இணைப்பு சாலைகளில் வரும் வாகனங்களால் வாகன விபத்து அடிக்கடி நடைபெறுகிறது. இதில் பலர் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க சாலை தடுப்பு, வேகத்தடை, சாலைகளில் ஒளிரும் சமிக்ஞைகள் மற்றும் விபத்து பகுதி அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை பொருத்த கோரி ஊராட்சி மன்ற தலைவி வடிவுக்கரசிஆறுமுகம் சார்பில் கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அவர்களிடம் விபத்து குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Updated On: 9 May 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  2. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  3. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  4. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  10. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு