/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 15,979 மாணவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 182 பள்ளிகளைச் சேர்ந்த 8148 மாணவர்களும் 7831 மாணவிகள் என 15979 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 15,979 மாணவர்கள்
X

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவிகளுக்கு தேர்வு அலுவலர் நடத்தை விதிமுறைகளை விளக்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வினை 15979 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10,+1 மற்றும் +2 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வந்து தற்போது மேல்நிலைத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 182 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களுக்காக 66 தேர்வு மையங்களில் 8,148 மாணவர்களும் 7831 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 979 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு குறித்து மாவட்ட கல்வித்துறை சார்பில் தெரிவிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66 தேர்வு மையங்களும், 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு 13 வழித்தடங்களில் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு பணியில் கண்காணிப்பாளர்கள், துறை அறைக்கண்காணிப்பாளர்கள், 66 முதன்மைக் அலுவலர்கள் மாற்று 975 திறனாளி மாணவர்களுக்கான 185 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 85 பறக்கும் படை உறுப்பினர்கள் என 1377 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்வு சிறப்பான முறையில் நடைபெற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதும் குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 26 March 2024 4:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்