/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது
X

பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தபோது எடுத்த படம். 

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதலாவதாக பிளஸ் டூ அரசு தேர்வு நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் 50 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வுகள் தொடங்குகின்றன. நாளை தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுத உள்ளனர்.மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 61 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

61 தேர்வு மையங்களுங்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் பணியில் இருப்பார். இதைத் தவிர 61 துறை அலுவலர்களும் இவர்களுக்கு உறுதுணையாக தேர்வுப் பணிகளை கவனிப்பர். மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடாக ஈடுபட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முறைகேடுகளை கண்காணிக்க 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறைக்கு பள்ளிக்கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On: 6 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!