/* */

பவானி புதிய பேருந்து நிலைய பாலத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: உடலை மீட்பதில் குழப்பம்

பவானி புதிய பேருந்து நிலைய பாலத்தில் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், உடலை மீட்பதில் இரு மாவட்ட போலீசாரிடையே குழப்பம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

பவானி புதிய பேருந்து நிலைய பாலத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: உடலை மீட்பதில் குழப்பம்
X

பவானி-குமாரபாளையம் புதிய பாலத்தின் கீழ் பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

ஈரோடு மாவட்டம், பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள புதிய பாலத்தின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் சடலமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருப்பதை பார்த்த பொதுமக்கள் பவானி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே பாலத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் சென்றுள்ளது.


தனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இரு மாவட்ட காவல் நிலைய போலீசார் யார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, குமாரபாளையம் போலீசார் திரும்பிச் சென்ற நிலையில், பவானி போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரு மாவட்ட காவல்நிலைய போலீசாரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சடலத்தை யார் மீட்பது என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பின்னர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் என்பது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் சுபாஷ் (24) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Aug 2022 2:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...