/* */

பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவில் நாளை கும்பாபிஷேக விழா:சிறப்பு ஏற்பாடு

பெருந்துறையில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன், முனியப்ப சாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவில்  நாளை   கும்பாபிஷேக விழா:சிறப்பு ஏற்பாடு
X

கோட்டை மாரியம்மன் கோவில் (கோப்பு படம் )

பெருந்துறையில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள், கிராம சாந்தி ஆகியவை நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி பவானி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தங்களை எடுத்து ஊர்வலமாக பெருந்துறையில் பவானி ரோடு, கோவை மெயின் ரோடு வழியாக கோவிலை சென்றடைந்தனர்.

தாரை, தப்பட்டை முழங்க தீர்த்தக்குடம் ஊர்வலத்துக்கு முன்பாக காங்கேயம் காளைகள், பசு மாடுகள், குதிரைகள் அணிவகுத்து வந்தன. தீர்த்தக்குடம் ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தொடங்கியது. இதையடுத்து மாரியம்மன் மற்றும் முனியப்பன் சாமி கோவில்களுக்கு வாஸ்து சாந்தி நடைபெற்றது.

பின்னர் மாலை, முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை, 2-ம் கால யாக பூஜை மற்றும் 3-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. பின்னர் கோவில் விமானங்களின் மீது கோபுர கலசங்களை வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 4-ம் கால பூஜை முடிந்ததும், 7.30 மணிக்கு கோவில் கலசங்களின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையொட்டி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கும்பாபிஷேக விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Updated On: 19 Aug 2023 5:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...