/* */

பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!

பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீரில் மூழ்கியிருந்த மாதவராயப் பெருமாள் கோயில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிகிறது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
X

மாதவராயப் பெருமாள் கோயில்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையின் நீர்மட்டம் 47 அடியாகக் குறைந்து விட்டதால், அணையின் நீர்தேக்கப்பகுதியில் உள்ள பழங்காலக் கோயில்கள் வெளியே தெரிகின்றன.

அந்த வகையில், டணாய்க்கன் கோட்டை பகுதியில் நீரில் மூழ்கியிருந்த மாதவராயp பெருமாள் கோயில் முழுவதுமாக காட்சியளிக்கிறது. கோயில் உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட 32 தூண்களும் காட்சியளிக்கின்றன. இன்னும் 12 முதல் 14 அடி வரை நீர்மட்டம் குறைந்தால், சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு உள்ளிட்டவை முழுவதுமாக காட்சியளிக்கும்.

கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு, தொடர்ந்து 6 ஆண்டுகளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்ததால், வெளியே தெரியாத டணாய்க்கன் கோட்டை மாதவராயp பெருமாள் கோயில், நீர்மட்டம் குறைந்ததால் தற்போது மீண்டும் வெளியே தெரிகிறது.

இவை சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் என கல்வெட்டுக்கள் மற்றும் வரலாறுகளில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த கல்வெட்டுகளைத் தொல்லியல் வல்லுநர்கள் ஆராய்ந்தால், மேலும் பல வரலாறுகள் தெரியவரும் என சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், இக்கோயில்களைப் பொதுமக்கள் சென்று பார்க்க வசதி இல்லை. எனவே, அணையின் நீர்மட்டம் குறைந்த காலங்களில் இக்கோயில்களைக் காண பொதுப்பணித்துறை படகு வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 April 2024 4:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  2. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  3. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  6. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  7. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  10. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...