/* */

கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக தேர்தல் பணிமனையினை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
X

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக தேர்தல் பணிமனையினை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பேசினார். உடன், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலம் உள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக தேர்தல் பணிமனையினை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் அதிமுக சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், அதிமுக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அருணாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பணிமனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர்.

அப்போது, பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாகை சூடக்கூடிய தேர்தல் என்பதால் தான் அருணாச்சலம் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை யாராலும் குற்றம் சொல்ல முடியாது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சுப்பராயன், கடந்த முறை வெற்றி பெற்றதற்கு பிறகு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் எந்தப் திட்டங்களையும் கொண்டு வரவில்லை, கோபி சட்டமன்ற தொகுதியில் ஒரு நாளாவது மக்களை சந்தித்துள்ளாரா, எந்த கிராமத்திற்கும் சுப்பராயன் சென்றது கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்பிக்கள் கே.ஜே.காளியப்பன், சத்தியபாமா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ரமணிதரன், கோபி முன்னாள் நகர மன்ற தலைவரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளருமான கே.கே.கந்தவேல் முருகன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ்.மணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அனுராதா, கோபி நகர மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மருத்துவமனை செயலாளர் ஆண்டமுத்து, கோபி ஒன்றியச் செயலாளர்கள் வக்கீல் வேலுமணி, குறிஞ்சிநாதன், கோபி நகர பேரவை செயலாளர் விஜய் (எ) விஜயகுமார், நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 March 2024 11:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!