/* */

ஈரோட்டில் 1.17லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பொதுமக்கள் 1.17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் 1.17லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் முதற் கட்டமாக கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முதலில் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பின்னர் போலீசார் பிற துறையில் பணியாற்றும் ஊழியர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 80 வயது மேற்பட்ட முதியவர்கள், மற்றும் 45 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்டம் முழுவதும் 24 அரசு மையங்களிலும், 42 தனியார் ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகள் போட்டு வருகிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதற்கு ஏற்ப தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதலில் ஒரு வாரத்திற்கு 4000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.தற்போது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4000 பேருக்கு வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறதுமாவட்டம் முழுவதும் பொதுமக்கள் 1 லட்சத்து 17ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது..

இதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசியும் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஒருவர் முதல் தடவை கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அடுத்த இருபத்தி எட்டாவது நாளில் இரண்டாவது அதே கோவேக்சின் தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 26 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை