/* */

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்-ஈரோடு கலெக்டர்

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்-ஈரோடு கலெக்டர்
X

ஈரோடு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறினார்.

ஈரோடு மேற்கு தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கான பொருட்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் கதிரவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. உள்ளூர் போலீசாருடன், கூடுதலாக சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் 8 குழுவினர் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் . சாலை வசதி இல்லாத கத்திரி மலை வாக்குச்சாவடிக்கு பொருட்களை கொண்டு செல்ல, கழுதைகள் கிடைக்கவில்லை என்பதால் தலைச்சுமையாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. வீடியோ கண்காணிப்பு குழுவில் இருந்தவர்கள் பறக்கும் படைக்கு மாற்றப்பட்டு, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடுதலாக 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் புகார்கள் அதிகம் வருகிறது.அரை மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி தீர்வு காண்பார்கள். வாக்குச்சாவடி மையங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 5 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!